ஆதார் தீர்ப்பு

சமீபத்தில் ஆதார் அரசியலமைப்பு செல்லுபடித் தன்மையை உச்சநீதிமன்றம் அதன் பெரும்பான்மை தீர்ப்பின் மூலம் உறுதி செய்தது (5 நீதிபதிகளில் 4 பேர்).

ஆதார்

 • ஆதார்என்பது அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் அவர்களின் பயோமெட்ரிக்(உடல் அங்கங்கள்) மற்றும் புள்ளிவிவர தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட 12 இலக்க பிரத்தேகமான  அடையாள எண்.
 • இதுஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகளின் இலக்கு நோக்கிய விநியோகம் ) சட்டம், 2016 இன் விதிகளின் கீழ் நிறுவப்பட்டது.
 • மின்னணுமற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட  ஒரு சட்டரீதியான அதிகாரம் படைத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதாா் தரவுகளை சேகரிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

 • ஒருதனிநபர் தொடர்பான அனைத்து விஷயங்களும் தனியுரிமைக்கான உரிமையின் உள்ளார்ந்த பகுதியாக இருக்கவில்லை.
 • சிலவிஷயங்கள் தனியுரிமையின் நியாயமான எதிர்பார்ப்புக்கு உள்ளவை, அவை அரசியலமைப்பின் 21 வது பிரிவினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஆதார் சட்டத்தின் பின்வரும் பிரிவுகள் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டன

 • பிரிவு33 (2) – தேசிய பாதுகாப்பு நலனுக்காக சிறப்பு அதிகாரம் பெற்ற அதிகாரிகளுக்கு தரவைப் பகிர UIDAI ஐ அனுமதித்தல்.
 • பிரிவு47 – UIDAI அல்லது அதற்கு அங்கீகாரம் பெற்றவா் புகாரின் பேரில் மட்டுமே குற்றத்தை அறிந்து கொள்ள நீதிமன்றம்  அனுமதித்தல்.
 • பிரிவு57 – ஒரு தனிநபரின் அடையாளத்தை காண எந்தவொரு “உடல் அமைப்பும் அல்லது நபரின்” ஆதார் தரவைப் பயன்படுத்துவதைக் குறித்தல்.

தீர்ப்பின் சிறப்பம்சங்கள்

 • பயோமெட்ரிக் முறை இருப்பதால் போலியான ஆதார்எடுக்க வாய்ப்பில்லை, மேலும் இது குறைந்தபட்ச புள்ளிவிவர மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை மட்டுமே சேகரிக்கிறது.
 • வருமானவரி அறிக்கையை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்வதற்கும், பான் எண் ஒதுக்கீடு செய்வதற்கும் ஆதார் கட்டாயமாகும்.
 • இருப்பினும், ஏழைமற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதால், நலத்திட்டங்கள் மற்றும் அரசாங்க மானியங்களின் வசதிகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம். ஆதார் என்ற பெயரில் பயனாளிகளுக்கு சேவைகள் அல்லது மானியங்களை மறுக்க முடியாது என்றும் கூறியது.
 • ஆதார்ஒதுக்கப்பட்டவர்களுக்கு கண்ணியத்தை அளிக்கிறது. ஒதுக்கப்பட்டவர்களுக்கு கண்ணியம் தனியுரிமையை விட அதிகமாகும் – நீதிபதி சிக்ரி.
 • CBSE, NEET, UGC மாணவர்களுக்கும்தேர்வுகளில் ஆதார் எண் தேவையில்லை. மேலும் பள்ளிகளில் சேர்க்கைக்கும் ஆதார் தேவையில்லை.
 • மொபைல்போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன் ஆதார் இணைக்க தேவையில்லை.
 • அங்கீகாரநோக்கங்களுக்காக சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆறு மாதங்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும்.
 • பணமசோதாவாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.
 • எந்தவொருதனிநபரும் தங்களது தரவு தவறாக பயன்படுத்த பட்டுள்ளதாக உணர்ந்தால் இப்போது அவர் / அவள் புகார் அளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
 • தொலைத்தொடர்புசேவை வழங்குநர் மக்களிடமிருந்து ஆதார் விவரங்களை பெற முடியாது.
 • பிரிவு33 (1)
 • மாவட்ட நீதிபதிஅல்லது உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தவிர, அடையாளம் மற்றும் அங்கீகார பதிவுகள் உள்ளிட்ட தகவல்களை வெளியிடுவதை தடை செய்கிறது.
 • உயர்நீதிமன்றத்தை அணுகுவதன்மூலம் நிறைவேற்றப்பட்ட அத்தகைய உத்தரவை சவால் செய்ய தனிநபர்களுக்கு உரிமை உண்டு.

கருத்து வேறுபாடு

 • நீதிபதிடி.ஒய். சந்திரசூட் தனது தீர்ப்பில், ஆதார் சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்றுவது அரசியலமைப்பின் மோசடி என்று கூறினார்.
 • மாநிலமானியங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கும் சட்டத்தின் 7 வது பிரிவையும் அவர் அரசியலமைப்பிற்கு முரணானது என்றாா்.